தோசை செய்வது எப்படி?
தோசை செய்வது எப்படி
தோசை, தமிழ் வீடுகளில நாள்தோறும் சுவையூட்டும், ஆரோக்கியம் நிறைந்த உணவா விளங்குது. வெறும் அரிசியும் உளுந்துமாகவே தோன்றும் தோசையின் சுவையில மிகுந்த மந்திரம் இருக்கு. தனித்துவமான சுவை, மொறு மொறுப்பான தோல் கொண்ட தோசை நம் பாரம்பரிய உணவுகளில ஒன்றா திகழுது. இன்றும் இது காலை உணவாவும், மாலையில சிற்றுண்டியாவும், இரவில விருந்தாவும் பரிமாறப்படுது. தோசையின் மிருதுவும் மொறுமொறுப்பும், அதனுடன் சேர்ந்து வரும் சாம்பார், தேங்காய் சட்னி அப்புறம் கார சட்னியால, சுவையில கூடுதல் உச்சத்த அடையுது. தோசை செய்வது எப்படிஅப்படீன்னு இந்த வலைப்பதிவுல பார்க்கலாம் வாங்க.
தோசை செய்ய தேவையான பொருட்கள்
1. பச்சரிசி – 2 கப்
2. உளுத்தம்பருப்பு – 1/2 கப்
3. வெந்தயம் – 1 டீஸ்பூன்
4. உப்பு – தேவைக்கேற்ப
5. எண்ணெய் – தோசை சுட தேவையான அளவு
செய்முறை
1. மாவு அரைக்க
- பச்சரிசி, உளுத்தம்பருப்பு, வெந்தயம் மூன்றையும் தனித்தனியா நன்றா கழுவி, 4 முதல் 6 மணி நேரம் தண்ணீரில ஊற வையுங்க.
- ஊறிய பிறகு, முதல்ல உளுத்தம்பருப்பு அப்புறம் வெந்தயத்த நீரில சேர்த்து நல்லா அரைங்க.
- அப்புறம், பச்சரிசியையும் சேர்த்து மிருதுவாக அரைங்க.
- அரைச்ச மாவுல, தேவையான அளவு உப்பு சேர்த்து, நல்லா கலக்குங்க.
- இந்த மாவ, 8 முதல் 10 மணி நேரம் அல்லது இரவோட ஒரு நாள் முழுக்க நன்றா புளிக்க வெயிங்க.
2. தோசை சுடுவது
- தோசைக்கல்ல நல்லா சூடாக்கி.
- தோசைக்கல்லில, சிறிது எண்ணெய் ஊற்றி, சுத்தம் செஞ்சுக்கணும்.
- ஒரு கரண்டி மாவு எடுத்து, தோசைக்கல்லில ஊற்றி கரண்டியால மெல்லியவாறு வட்டமா பரப்புங்க.
- தோசை பழுப்பு நிறமா மாறும்போது, மேலே கொஞ்சம் எண்ணெய் ஊத்தி தோசை இரண்டு பக்கமும் மொறுமொறுப்பா தங்க நிறத்துல மாறும் வரை சுடுங்க.
- தோசை வெந்ததும், அத எடுத்து பரிமாருங்க.
3. பரிமாறுவது
தோசையை, சாம்பார், தேங்காய் சட்னி, மற்றும் கார சட்னியுடன் சூடா பரிமாறலாம்.
4. குறிப்பு
- தோசை மாவ நல்லா புளிக்க வெக்குறது ரொம்ப முக்கியம்.
- தோசை மொறுமொறுப்பா வரணும்னா தண்ணீர கொஞ்சம் கம்மியா வச்சு மாவ கலக்குங்க.
- தோசைக்கல்ல அடிக்கடி எண்ணெய் கொண்ட துணியால அல்லது வெங்காயத்துல துடைத்து சுத்தம் செஞ்சா தோசை நல்லா சுட்டு எடுக்க முடியும்.
- தோசை சுட நெறய எண்ணெய் போடாம, குறைந்த அளவிலயே ஊற்றுங்க. அப்போதான் ஆரோக்கியமாவும் நல்ல சுவையாவும் இருக்கும்.
தோசையின் நன்மைகள்
- தோசை மாவு புளிக்க வைக்கும்போது, அதுல உள்ள பாக்டீரியாக்கள் செரிமானத்த மேம்படுத்தும். இது உடலுக்கு மிகவும் நல்லது.
- நம் உடலுக்கு தேவையான முக்கிய சத்தான புரதத்த அதிக அளவில கொண்டிருக்கும். இது உடல் வளர்ச்சிக்கும், தசை வளர்ச்சிக்கும் உதவுது.
- தோசையில நார்ச்சத்து அதிகம். இது செரிமானத்துக்கு உதவுவதோட, குடலின் ஆரோக்கியத்த பாதுகாக்க உதவுது.
- மேலும், தோசை குறைந்த கொழுப்ப கொண்டிருப்பதால, உடல் பருமன் இல்லாம இருக்க உதவுது.
- அடுத்து தோசைல இருக்க கார்போஹைட்ரேட் உடனடி சக்தி அளிக்க உதவுது.
- உளுத்தம்பருப்பு இரும்பு சத்த அதிக அளவில கொண்டிருப்பதால, ரத்த சோகை இல்லாம பாதுகாக்கும்.
- இறுதியா, தோசையில இருக்க வைட்டமின் B, நரம்பு மண்டலத்தின் செயல்பாட்ட மேம்படுத்துது.
முடிவுரை
தோசைய செய்ய தேவையான அனைத்து பொருட்களையும் நீங்க உயிர் இயற்கை உழவர் சந்தையில வாங்கிக்கலாம். நேரடியா கடைல, அல்லது வலைத்தளம் அப்புறம் உயிர் செயலி மூலமா வீட்டுல இருந்த படியே கூட நீங்க ஆர்டர் செய்யலாம்.
தோசை செய்து சாப்பிட்டு, அதன் சுவையையும், ஆரோக்கிய நன்மைகளையும் அனுபவித்து மகிழுங்க!