பட்டை (Cinnamon)

பட்டையின் ஆரோக்கிய நன்மைகள்

வரலாற்றில் ஒரு பார்வை

பட்டை, தமிழில “இலவங்கப்பட்டை” அப்படீன்னு அழைக்கப்படுது. இதன் பயன்பாடு நம்மளோட முன்னோர்கள்ல தொடங்கி, பல நாகரிகங்களில இடம்பெறுது. எகிப்தியர்கள் இது குறித்து பல்வேறு பதிவுகள செஞ்சுருக்காங்க. அவுங்க இத தைலம் அப்புறம் திரவியங்கள பாதுகாக்க பயன்படுத்தறாங்க. ஏன்னா, இதனோட நறுமணம் அப்புறம் கிருமிநாசினி பண்புகள கொண்டிருக்கு.

எகிப்திய மம்மி செய்யப்பட்ட உடல்களின் பாதுகாப்புக்கு உதவுச்சு. சீனாவில, கி.மு. 2800-ல பட்டைய பத்தி நன்கு அறியப்பட்டுச்சு. அங்கிருந்த மாபெரும் மருத்துவ நூல்கள் இதன் மருத்துவ குணங்கள பத்தி சுட்டிக்காட்டியிருக்கு. இந்தியாவில, பட்டை ஆயுர்வேதம் அப்புறம் சித்த மருத்துவத்தில முக்கியமான மூலிகையா கருதப்படுது.

ரோமர்களுக்கும் கிரேக்கர்களுக்கும் பட்டையோட நறுமணம் அப்புறம் சுவை ரொம்ப பிடிச்சதுனால அவங்களோட உணவுகளில இத பயன்படுத்தி இருகாங்க.

மேலும், பட்டை ஒரு முக்கியமான வணிகப் பொருளா கருத்தப்பட்டுச்சு. அரேபிய வர்த்தகர்கள் இத இந்தியா, சீனா, அப்புறம் இலங்கைல இருந்து மத்திய கிழக்கு அப்புறம் ஐரோப்பாவுக்குக் கொண்டு போயிருக்காங்க. பட்டையோட விலை ரொம்ப அதிகமா இருந்ததுனால இத பணக்காரங்க அப்புறம் அரச குடும்பங்கள் மட்டும் வாங்கி பயன்படுத்தி இருகாங்க.

பட்டையின் தயாரிப்பு மற்றும் வகைகள் (Production and Types of Cinnamon)

பட்டை மரத்தோட உள்புற பட்டைய பயன்படுத்தி தயாரிக்கப்படுது. மரத்தின் பட்டைய எடுத்து உலர்த்தி சுருட்டி பட்டை தண்டுகள் அல்லது பட்டை தூளா மாத்தப்படுது. பட்டை இரண்டு முக்கிய வகைகளா வகைப்படுத்தப்படுது.

சிலோன் பட்டை (Ceylon Cinnamon)

இத உண்மையான சினமன் அப்படீன்னும் அழைக்குறாங்க. இது மெல்லிய அப்புறம் மென்மையான பட்டைய கொண்டிருக்கு.

கேசியா பட்டை (Cassia Cinnamon)

இத சீன சினமன் அப்படீன்னும் அழைக்குறாங்க. இது அடர்த்தியான அப்புறம் கடினமான பட்டைய கொண்டிருக்கு.

பட்டையின் ஊட்டச்சத்துக்கள் (Nutrients in Cinnamon)

  • பட்டையில நார்ச்சத்து (Dietary Fibre) மிகுந்து இருக்கு. நார்ச்சத்து செரிமானத்த காக்க உதவுது அப்புறம் குடல் இயக்கத்த நல்லா சீராக்குது.
  • அடுத்து, பட்டையில கால்சியம் (Calcium) நிறைந்து இருக்கு. கால்சியம் எலும்புகளுக்கும் பற்களுக்கும் மிகவும் முக்கியமானது, அப்புறம் எலும்புகளோட வலிமைய அதிகரிக்க உதவுது.
  • இரும்பு (Iron), ரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்கு முக்கியமானதா இருக்கு. அப்புறம் நம்ம உடம்போட ஒட்டுமொத்த சக்தி நிலைய சீராக்க உதவுது.
  • மாங்கனீசு (Manganese) உடலோட சரியான செயல்பாட்டுக்கு மிகவும் தேவையான ஒரு கனிமம். இது எலும்புகள் அப்புறம் மூளைச் செயல்பாட்டுக்கு முக்கியமானது.
  • வைட்டமின் கே (Vitamin K) இரத்தம் உறையுறத தடுக்க உதவுது. இது உடலோட பல்வேறு செயல்பாடுகளுக்கு முக்கியமா இருக்கு.
  • பட்டையில பல வகையான ஆன்டிஆக்ஸிடன்ட் (Antioxidants) நிரம்பி இருக்கு. இந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலோட செல் சேதத்த தடுக்க, அப்புறம் செல்களோட ஆரோக்கியத்த பராமரிக்க உதவுது.
  • பீட்டா-கரோட்டின் (Beta-Carotene) உடலில வைட்டமின் ஏ ஆ மாறி, பார்வை அப்புறம் நோய் எதிர்ப்பு மண்டலத்த சீராக்க உதவுது.
  • பி-காமெரிக் ஆசிட் (P-Coumaric Acid) ஒரு இயற்கையான ஆன்டிஆக்ஸிடன். இது உடலில ஏற்படுற கொலஸ்ட்ரால குறைக்க உதவுது.
  • பட்டையோட முக்கியமான செயல்பாடு அப்படீன்னா அது கினமேடல்டஹைடு (Cinnamaldehyde), அதனோட இனிப்பான சுவைக்கும், மருத்துவ குணங்களுக்கும் காரணமா இருக்கு.
  • துத்தநாகம் (Zinc) நோய் எதிர்ப்பு மண்டலத்த வலுப்படுத்த அப்புறம் செல் உற்பத்திய மேம்படுத்த உதவுற கனிமமா இருக்கு.
பட்டையின் ஆரோக்கிய நன்மைகள்

பட்டையின் ஆரோக்கிய நன்மைகள் (Health Benefits of Cinnamon)

பட்டை பல்வேறு ஆரோக்கிய நன்மைகள கொண்டிருக்கு. அதனோட முக்கிய நன்மைகள பாக்கலாம் வாங்க.

பட்டையில அதிக அளவிலான ஆக்ஸிஜனேற்ற பண்புகள் (Antioxidant Properties) இருக்கு. இது உடலில இருக்க மோசமான மூலக்கூறுகள (free radicals) நீக்க உதவுது.

பட்டை இரத்தத்தில ஆரோக்கியமான இரத்த சர்க்கரை (Blood Sugar Regulation) அளவக் கட்டுப்படுத்த உதவுது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதா இருக்கும்.

வாதநோய் அப்புறம் வீக்கத்த குறைக்க உதவுது.  பட்டையில இருக்க பயனுள்ள பொருட்கள் உடலில வீக்கத்த குறைக்க (Anti-inflammatory Properties) உதவுது.

பட்டை கொழுப்புச் சத்து அப்புறம் உடலோட எரிச்சல் அளவ குறைச்சு இதய ஆரோக்கியத்த (Heart Health) மேம்படுத்துது.

இதுல இருக்க சினமால்டெஹைடு போன்ற பொருட்கள் நுண்ணுயிர்  எதிர்க்கும் திறன (Antimicrobial Properties) உடையது. இது தொற்றுநோய்கள எதிர்க்க உதவுது.

பட்டையின் மருத்துவ பயன்பாடுகள் (Medicinal Uses of Cinnamon)

பட்டையின் மருத்துவ பண்புகள் பாரம்பரிய மருத்துவ முறைகளில பல்வேறு நோய்களுக்கு பயன்படுத்தப்படுது.

இது எலும்பு ஆரோக்கியத்த மேம்பாட்டுத்துற தன்மை கொண்டிருக்கு.

பட்டை எண்ணெய், தோல் சிகிச்சைகளில பயன்படுத்தப்படுது. இது பாக்டீரியா, பூஞ்சை நோய்கள எதிர்க்க உதவுது.

ஆயுர்வேதத்தில பட்டைய குடல் நோய்கள், இரத்த சுழற்சி குறைபாடுகள், சளி நோய்கள் போன்றவற்றுக்கு மருந்தாவும் பயன்படுத்துறாங்க.

பட்டையின் சமையல் பயன்பாடுகள் (Culinary Uses of Cinnamon)

பட்டை அன்றாட சமையலின் அத்தியாவசிய அம்சமா பயன்படுத்தப்படுது. அதன் சுவை அப்புறம் மணம் உணவுக்கு ஒரு தனித்துவத்த அளிக்குது.

பட்டை இனிப்புகள் அப்புறம் பிற சுவையான உணவுகளில பொதுவா பயன்படுத்தப்படுது. கீரைகள், பழவகைகள், கேக்குகள் போன்றவற்றிலேயும் சேர்க்கப்படுது.

பட்டைய சேர்த்து மசாலா தேநீர், காபி, கோதுமை பால் போன்ற பானங்கள நாம தயாரிக்கலாம்.

பட்டைய மசாலா பொடிகளில சேர்த்து உணவுகளின் சுவைய கூட்ட முடியும்.

பட்டைய பல பாரம்பரிய மருத்துவ முறைகளில பயன்படுத்திட்டு வந்துருக்காங்க. குறிப்பா, இது சர்க்கரை நோய், ஜலதோஷம், மூட்டு வலி போன்ற நோய்களுக்குப் பயன்படுது.

இறுதிச்சுருக்கம்

பட்டை அதனோட இனிப்பு சுவை, நறுமணம் அப்புறம் ஆரோக்கிய நன்மைகளால அனைத்து தரப்பு மக்களுக்கும் விரும்பத்தக்க ஒரு பொருளா இருக்கு. இது பாரம்பரிய அப்புறம் நவீன சமையலில ஒரு முக்கிய இடத்த பெருது. உங்களோட அன்றாட உணவில பட்டையச் சேர்த்து அதனோட ஆரோக்கிய நன்மைகள அனுபவிங்க.

உங்களுக்கு இப்போ தூய்மையான தரமான முறைல வளர்க்கப்பட்ட பட்டை வேணுமா எங்களோட உயிர் இயற்கை உழவர் சந்தைல நீங்க வாங்கிக்கலாம். எங்களோட உணவுப் பொருட்கள நீங்க உயிர் கடைகல்லையோ, App அல்லது வலைத்தளம் மூலமாவோ நீங்க வாங்கிக்கலாம். மேலும், பிற உணவு பொருட்களோட பயன்கள் அப்புறம் ஆரோக்கிய நன்மைகள தெரிஞ்சுக்க எங்களோட பிற வலைப்பதிவுகள பாருங்க.