வைட்டமின் பி3!

வைட்டமின் பி3 என்பது நியாசின், எட்டு பி விட்டமின்களில் ஒன்று . உடலில் அனைத்து பகுதிகளிளும் செயல்படும் இது ஊட்டச்சத்தில் முக்கிய பங்களிக்கிறது. வைட்டமின் பி3 நியாசின் எடுத்துக்கொள்வதன் மூலம் கொலஸ்ட்ரால் அளவை குறைக்கலாம் ,சுவாச  அமைப்பில் இருக்கும் பிரச்சனைகளை நீக்கும்.  இதை டிரிட்டோபானிருந்து உடல் உற்பத்தி செய்கிறது. இறைச்சி, கடல் உணவுகள், பால் பொருட்கள், முட்டை, கீரைகள் மற்றும் தானியங்கள் இருக்கிறது. ஆரோக்கியமான இரத்த ஓட்டம், மூளை செயல்பாடு மற்றும் நியாபக சத்தியை அதிகரிக்கும்.  பெல்லாக்ரா என்பது டெர்மடிஸ் டிமென்ஷியா வயிற்றுப்போக்கு இறப்பு ஏற்படுத்தும் ஒரு நோய், இது நியாசின் (வைட்டமின் பி3) குறைபாட்டால் ஏற்படும் நோய். நியாசின் நல்ல HDL கொழுப்பின் அளவை அதிகரிக்கும். கொலஸ்ட்ரால் சிகிச்சையில் பயன்படுத்தும்போது ட்ரிகிளிசரைடுகளைக் குறைப்பதற்கு உதவுகிறது. நியாசின் தீங்கு விளைவிக்கும் எல்டிஎல் கொழுப்பை குறைக்கும். பெரிய அளவில் கொலஸ்ட்ரால் சிகிச்சையில் நியாசின் பயனுள்ளதாக இருக்கும். வைட்டமின் பி3 அல்லது நியாசின் மூளை செயல்பாட்டிற்கு நன்மையளிக்கும். கோஎன்சைம்களான நிகோடினமைடு அடினைன் டைனுக்ளியோடைடு (என்ஏடி) மற்றும் நிகோடினமைடு அடினைன் டைனுக்ளியோடைடு பாஸ்பேட் (என்ஏடிபி) ஆகியவை உடலில் 400க்கும் மேற்பட்ட வளர்சிதை மாற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன, அவற்றில் நீங்கள் உண்ணும் உணவில் இருந்து ஆற்றலைப் பெறுவதோடு இணைக்கப்பட்டுள்ளன. இது NAD மற்றும் NADP ஆகிய கோஎன்சைம்களில் காணப்படுகிறது.

 இரத்த கொழுப்பு மற்றும் இரத்த அழுத்தத்தின் அளவைக் கட்டுப்படுத்தி நன்மையளிக்கும். நீரிழிவு, அறிவாற்றல் செயல்திறன் மற்றும் தோல் புற்றுநோயைத் தடுக்க உதவும். வைட்டமின் B3 ஆரோக்கியமான பசியையும் அழகான சருமத்தையும் ஊக்குவிப்பதன் மூலம் இளமை தோற்றத்தை அளிக்கிறது. லிப்பிடுகள், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் ஆல்கஹால் ஆகியவற்றின் செரிமானம் அமைப்பு சீராக வேலை செய்ய இது அவசியம். வைட்டமின் B3 செரிமானத்திற்கு உதவுகிறது, உணவில் உள்ள சாறுகளை உடலுக்குள்  உறிஞ்சுகிறது மற்றும் குடலில் இருந்து கழிவுக்களை நீக்குகிறது, இரைப்பை குடல்  செயல்பாட்டிற்கு அவசியமானது. மலச்சிக்கல் வாய்வு    பிரச்சனைகள் குறைகிறது. 

 வைட்டமின் பி3  அல்லது நியாசின் தோல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது சுருக்கம் மற்றும் சருமத்தை சரிசெய்ய உதவும் வைட்டமின் B3 (நியாசின்) கீல்வாதத்தின் அறிகுறிகளைப் சரிசெய்ய உதவுகிறது.    மூட்டு வலி சம்மந்தப்பட்ட பிரச்னையை குணப்படுத்துகிறது  நியாசின் மூலம், பெரும்பாலான நோயாளிகள் HBA1C அளவை திறம்பட கட்டுப்படுத்தி மீட்க முடியும். மருத்துவ வழிகாட்டுதலின் கீழ், நியாசின் நீரிழிவு நோயாளிகளுக்கு பாதுகாப்பானது மற்றும் மொத்த கொழுப்பு, எல்டிஎல் மற்றும் ட்ரைகிளிசரைடுகளைக் குறைக்க உதவுகிறது. சாதாரண உணவு அளவுகளில் நியாசின் உட்கொள்வது எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாது. கூடுதல் அளவுகள் குமட்டல், கல்லீரல் பாதிப்பு மற்றும் நியாசின் ஃப்ளஷ் ஏற்படுத்தலாம்.