இயற்கை விவசாயம்!

வேளாண்மை இந்தியாவின் முதுகெலும்பு. இந்தியாவின் தொன்மையான விவசாய முறை என்பது இயற்கை விவசாயம் தான். இயற்கை விவசாயம் பற்றி விவசாயிகள் மட்டுமின்றி எல்லோரும் அறிந்து கொள்வது நல்லது. இது இன்றைய சூழலுக்கு மாற்று வழியானதாகவும் அவசியமானதாகவும் உள்ளது.

20வது நூற்றாண்டில் செயற்கை உரங்கள் உருவாக்கப்பட்டன. முதலில் யூரியாவும் உரங்களும், அதன் பிறகு அம்மோனியா ஹேபர்-பாஸ்ச் முறையைப் பயன்படுத்தி மிகப் பெரும் அளவில் உற்பத்தி செய்யப்பட்டன, அம்மோனியாவிலிருந்த்து கிடைக்கப் பெற்ற மற்ற இரசாயன உரம் மற்றும் பூச்சிக்கொல்லிகளில் மலிவான விலையிலும், எளிதில் இட மாற்றம் செய்யக் கூடியனவாகவும் இருந்ததால் விவசாயிகள் அதிக நாட்டம் காட்டினார்கள். தனியொரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்றார் முண்டாசுக் கவி பாரதி, அவரே இன்று இருந்திருந்தால், இரசாயன கிடைக்கும் உலகை இயற்கை இடுபொருட்கள் மூலம் அழித்திடுவோம் என்று பாடியிருக்கக்கூடும்.இன்று அந்த உணவே கொஞ்சம் கொஞ்சமாய் நஞ்சாகி மாறி, நம் உணவு நம் உயிரை எடுக்க தொடங்கியிருக்கிறது.

பொன்னு விளையுற பூமி அன்று ஆனால், இன்று இந்த மண்ணில், விளைவது எல்லாம் நஞ்சாக மாறி வருவதற்கு காரணம் செயற்கை உரங்களே. இயற்கை வேளாண்மையில் பூச்சிக்கொல்லிகள், உரங்கள், மரபணு மாற்றப்பட்ட உயிரினங்கள், ஆன்டிபயாட்டிக்குகள் மற்றும் வளர்ச்சி ஹார்மோன்கள் போன்ற செயற்கையான வேதிப்பொருட்களை பயன்படுத்தாமல் இயற்கையோடு இணைந்து வேளாண்மை செய்வது இயற்கை விவசாயம் ஆகும். அதாவது இயற்கையின் போக்கில் விவசாயம் செய்வது ஆகும். இயற்கை வழி முறைகள் பயன்படுத்துவதால் காற்று ஆகாயம் ஆகியவை பாதுகாக்கப்படுவதோடு உடல்நலத்திற்கேற்ற பயனிட்டாளர்களுக்கும் நஞ்சில்லா உணவு கிடைக்கிறது. மண் நீர் வளப்படுவது மட்டுமல்லாமல் விவசாயிகளும் அதிக விளைச்சலுடன் லாபத்தையும் பெறுகின்றனர்.

நமது அடுத்த தலைமுறைக்கு மாசற்ற காற்று, ஆகாயம், நீர் முறையைத் தருவதோடு ஆரோக்கியமான, நஞ்சில்லா மற்றும் மருத்துவ தன்மை உள்ள உணவுக்கு வழிவகை செய்து நமது தலையாய கடமையாகும்.விவசாய தோழர்களே வாருங்கள் நமது உயிருடன் இணைந்து இயற்கை வேளாண்மை செய்து நமது மண்ணை வளமாக்குவோம் மிக முக்கியமாக இப்பூவுலகை முழுமையாக மாற்று பாதையில் அழைத்து சென்று நஞ்சில்லா உணவை அளித்து நோயில்லா சமுதயத்தை உருவாக்குவோம்.