Roof Garden Mix

உயிர் ரூஃப் கார்டன் மிக்ஸ் 

உயிர் ரூஃப் கார்டன் மிக்ஸ் என்பது மண்புழு உரம் தென்னை நார்கழிவு உயிர் உரங்கள் உயிரியல் பூஞ்சாணக் கொல்லிகள் உயிரியல் பூச்சிக் கொல்லிகள் ஹியூமிக் அமிலம் மற்றும் பலவகைப் பிண்ணாக்குகள் கலந்த ஒரு சிறப்புக் கலவையாகும். இது மாடித் தோட்டங்களுக்கு என்றே தயாரிக்கப்பட்ட ஒரு அங்கக தொட்டிக் கலவை உரமாகும். 

பயன்கள் 

  1.  பயிர் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து ஊட்டச் சத்துக்களும் நிறைந்த ஒரு மிகச் சிறந்த அங்கக தொட்டி உரக் கலவை. விதை முளைப்புத் திறனை மேம்படுத்துவதோடு புதிய தண்டு மற்றும் இலை வளர்ச்சியை ஊக்குவித்துப் பயிரின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறது.                                                                                                                                                                  
  2.  உயிர் ரூஃப் கார்டன் மிக்ஸ் நன்மை செய்யும் நுண்ணுயிரிகளான தழைச்சத்தை நிலைநிறுத்தும் நுண்ணுயிரி மணிச் சத்தைக் கரைக்கும் மற்றும் சாம்பல் சத்தை எடுத்துக் கொடுக்கும் பாக்டீரியா மற்றும் செல்லுலோசைச் சிதைக்கும் நுண்ணுயிரிகளை அதிகம் கொண்டுள்ள ஒரு இயற்கை உரக் கலவையாகும்.                                                                                                                                                              
  3. பூச்சித் தாக்குதல் மற்றும் நோய்கள் தாக்குதலைக் குறைக்கிறது.                                                                    
  4.  உயிர் ரூஃப் கார்டன் மிக்ஸ் நல்ல காற்றோட்டம் கொண்ட மற்றும் நீர்ப்பிடிப்புத் திறன் கொண்ட 
  5. ஒரு சிறந்த உரக் கலவையாகும் செடிகளுக்கு அடிக்கடி நீர்ப் பாய்ச்சல் தேவையில்லை.            
  6.   உயிர் ரூஃப் கார்டன் மிக்ஸ் குறைவான எடை கொண்டுள்ளதால் மாடியின் மேல் அதிக பளு ஏற்றுவதைக் குறைக்கிறது. கையாளுவதற்கும் உபயோகிப்பதற்கும் எளிதானது மற்றும் கெட்ட வாடை வீசுவதில்லை . 

உபயோகப் படுத்தும் முறைகள் 

  1. ஒரு தொட்டி அல்லது குரோ பேக்கை எடுத்துக் கொண்டு தண்ணீர் நன்கு வடியத் தேவையான துளைகளை இடவும் தொட்டி / குரோ பேக்கின் சுமார் 90% அளவு உயிர் ரூஃப் கார்டன் மிக்சை நிரப்பவும். தேவையானால் சம அளவு மண் கலந்து கொள்ளலாம்                                                                         
  2.   நட இருக்கும் நாற்றை தொட்டியின் மய்யப் பகுதியில் வைத்து மென்மையாக அழுத்தவும்                     
  3.  விதையாக இருந்தால் உயிர் ரூஃப் கார்டன் மிக்ஸ் நிரப்பிய பின் விதையைத் தொட்டியின் மய்யப் பகுதியில் வைக்கவும். அதை விதையின் பருமன் போல இரண்டு மடங்கு பருமன் அளவு உயிர் 

ரூஃப் கார்டன் மிக்ஸ் கொண்டு மூடவும்.                                                                                                  

  1. அனைத்துப் பகுதிகளும் ஈரமாகும் வரை தேவையான அளவுத் தண்ணீரைத் தெளிக்கவும்.

Roof Garden Mix

     Roof Garden Mix is ​​a special blend of vermicompost, coir waste biofertilizers, biological fungicides, biological insecticides, humic acid and multi-layers. It is an organic potting mix fertilizer specially formulated for terrace gardens.

uses

  •  An excellent organic potting mix is rich in all the nutrients required for crop growth. Improves seed germination and promotes new stem and leaf growth and supports overall growth of the crop.
  •   Roof Garden Mix is ​​a natural fertilizer blend rich in beneficial microorganisms such as soil-stabilizing microorganisms, humus-dissolving and ash-removing bacteria, and cellulose-degrading microorganisms.
  • Reduces pest and disease attacks.
  • Roof Garden Mix is ​​well aerated and water absorbent
  • It is a great fertilizer mix for plants that don’t need frequent watering.
  •  Roof Garden Mix is ​​light in weight which reduces the burden on the roof. Easy to handle and use and does not smell bad.

Methods of use

  • Take a tank or grow bag and fill it with bio roof garden mix about 90% of the tank / grow bag and make holes for drainage. Equal amount of soil can be mixed if necessary
  • Place the seedling in the center of the pot and press gently
  •  If seeded then fill with organic roof garden mix and place the seed in the center of the pot. It is twice the size of the seed
  • Cover with roof garden mix.
  • Spray as much water as needed until all parts are wet.