UYIR BOOSTER

உயிர் பூஸ்ட்டர் 

உயிர் பூஸ்ட்டர் என்பது உயிர் உரங்கள் – நன்மை செய்யும் நுண்ணுயிரிகள் மூலம் மண்ணில் சத்துக்களை அதிகரிக்கச் செய்யும் மற்றும் நோய்க் கிருமிகளைக் கட்டுப்படுத்தும் உயிரியல் பூஞ்சாணக் கொல்லிகள் கலந்த ஒரு கலவையாகும். இது மாடித் தோட்டப் பயிர்களை பராமரிக்க உதவும் ஒரு மிகச் சிறந்த கலவையாகும். 

பயன்கள் : 

  1.  உயிர் பூஸ்ட்டர் காற்றில் உள்ள தழைச் சத்தை மண்ணில் நிலை நிறுத்தவும் மணிச் சத்தைக் கரைத்துக் கொடுக்கவும் , சாம்பல் சத்து மற்றும் பிற சத்துக்களை எடுத்துக் கொள்ளவும் உதவும் பல நன்மை செய்யும் நுண்ணுயிரிகளின் கூட்டுக் கலவை.                                       
  2.    நாற்றழுகல், வாடல், வேர் அழுகல், கிழங்கு அழுகல், தண்டழுகல் போன்ற மண்ணின் மூலம் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்த உதவுகிறது. 
  3.  பயிர்கள் வறட்சியைத் தாங்கும் தன்மையை அதிகரிக்கிறது மற்றும் பயிர்களின் முதிர்வுக் காலம் வரை நோய்க் கிருமிகளில் இருந்து பாதுகாக்கிறது. 

உபயோகப் படுத்தும் முறைகள் 

  1.  10-15 மில்லி உயிர் பூஸ்டருடன் அதே அளவு உயிர் பஞ்சகவ்யா மற்றும் உயிர் ஹியூமிக் அமிலம் ஆகியவற்றை ஒரு லிட்டர் தண்ணீ ரில் கலந்து பயிர்களின் வேர்ப்பகுதியில் ஊற்றவும். ஒரு செடிக்கு சுமார் 100 மில்லி உபயோகப் படுத்தவும்.                                                                                                 
  2.   மேற்கூறிய முறையில் வாரம் ஒரு முறை தொடர்ந்து உபயோகப் படுத்தவும்.

Booster

   Booster is a biofertilizer – a mixture of biological fungicides that increase nutrients in the soil through beneficial microorganisms and control pathogens. It is a very good combination to help maintain terrace garden crops.

uses :

  •  Booster is a combination of beneficial microorganisms that help to fix airborne foliar nutrients to the soil, solubilize organic matter, and take up ash and other nutrients.
  • It  helps to control soil borne diseases like seedling rot, wilt, root rot, tuber rot, stem rot.
  • It  increases drought tolerance of crops and protects against disease till maturity of crops.

Methods of use

  •  Mix 10-15 ml of bio booster with equal amount of bio panchakavya and humic acid in one liter of water and pour on the roots of the crops. 
  • Use about 100 ml per plant. Use it once a week in the above manner.