சீத்தாப்பழம் / Custard Apple / Seetha Palzham

சீத்தாப்பழம் நன்மைகள்

வரலாற்றில் ஒரு பார்வை (History of Custard Apple)

சீத்தாப்பழம் (Annona squamosa) தெற்கு அமெரிக்காவில தோன்றுச்சு. இது பின்னர் ஆசியா, ஆப்பிரிக்கா அப்புறம் பல உஷ்ணமண்டல பகுதிகளில பரவுச்சு. அப்புறம் சீத்தாப்பழம் இந்தியாவுக்கு ஐரோப்பியர்கள் வருகையால வந்துச்சு.

காந்தா ஸம்ஹிதா போன்ற நூல்களில கி.பி. 1590-ஆம் ஆண்டுகளுக்கு முற்பட்ட குறிப்புகளில இந்த பழத்த பத்தி சொல்லப்பற்றுக்கு. சீத்தாப்பழம் பல நூற்றாண்டுகளா உணவாவும் மருந்தாவும் பயன்படுத்தப்பட்டத இது காட்டுது. மேலும், சித்தர்கள் அப்புறம் ஆயுர்வேத நிபுணர்கள் இதன மருத்துவ மூலிகையா பயன்படுத்தி வந்துருக்காங்க.

சீத்தாப்பழத்தின் பண்புகள் மற்றும் வகைகள் (Characteristics and Types of Custard Apple)

சீத்தாப்பழம் சிறிய, பச்சை நிறத்தில இருந்து அடர் பச்சை நிறத்தில இருக்கும் ஒரு சுவையான பழம். இதனோட தோல் அடர்த்தியா சிறு சிறு  உருண்டைகள இணைத்த மாதிரி இருக்கும். சீத்தாப்பழத்தின் உள்ளே வெள்ளை நிறச் சதை அடுக்குகளா இருக்கும். அதுக்குள்ள கருப்பு விதைகள் இருக்கும். இது மிக இனிப்பானது மட்டும் இல்லாம தானாவே வாய் ஊறுகிற அளவு சுவையாவும் இருக்கும்.

சீத்தாப்பழம் உஷ்ணமண்டல அப்புறம் மிதவெப்ப மண்டல பகுதிகளில பரவலா வளர்க்கப்படுது. இந்தியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து அப்புறம் சில லத்தீன் அமெரிக்க நாடுகள் சிறந்த உற்பத்தியாளர்களா இருக்காங்க.

சில பிரபலமான வகைகள் அப்படீன்னு பார்த்தோம்னா ‘அட்டிஸ்மோ’, ‘பிங்குயா’, ‘செரிமான்டா’ ஆகியவை ஆகும்.

சீத்தாப்பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் (Nutritional Profile of Custard Apple)

சீத்தாப்பழம் பலவிதமான ஊட்டச்சத்துக்கள கொண்டிருக்கு.

  • சீத்தாப்பழத்தில கார்போஹைட்ரேட்கள் அதிகம் இருக்கு. இது உடலுக்குத் தேவையான ஆற்றல வழங்குது.
  • வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி6 இருக்கு. ஒரு கப் (சுமார் 150 கிராம்) சீத்தாப்பழம் சுமார் 60% வைட்டமின் சி மற்றும் 15% வைட்டமின் பி6 உட்பட, 2.4 கிராம் நார்ச்சத்த வழங்குது. வைட்டமின் சி நோயெதிர்ப்பு சக்திய அதிகரிக்க உதவுது, B6 மூளை செயல்பாட்ட மேம்படுத்துது.
  • கால்சியம், பொட்டாசியம், தாமிரம், மாங்கனீசு, மெக்னீஷியம், இரும்பு ஆகிய தாதுக்கள் சீத்தாப்பழத்தில அதிகமா இருக்கு. கால்சியம், எலும்புகள் அப்புறம் பற்களின் ஆரோக்கியத்த பாதுகாக்க உதவுது. பொட்டாசியம் இரத்த அழுத்தத்த கட்டுப்படுத்த உதவுது.
  • இதுல இருக்க நார்ச்சத்து செரிமானத்த மேம்படுத்துவதில முக்கிய பங்கு வகிக்குது.

சீத்தாப்பழம் நன்மைகள் (Health Benefits of Custard Apple)

  • சீத்தாப்பழம் வைட்டமின் சி அப்புறம் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்து இருக்கு. இதனால உடல்ல நோயெதிர்ப்பு சக்தி அதிகரிச்சு, சளி, காய்ச்சல் போன்ற நோய்களுக்கு எதிரா பாதுகாக்குது.
  • இதுல இருக்க Dietary Fibre செரிமான முறைய மேம்படுத்தி, மலச்சிக்கல் அப்புறம் குடல் கோளாறுகள தடுக்க உதவுது.
  • சீத்தாப்பழத்தில இருக்க வைட்டமின் பி6 அப்புறம் பீட்டா கரோட்டின் கல்லீரல் ஆரோக்கியத்த பராமரிக்க உதவுது.
  • சீத்தாப்பழத்துல இருக்க பொட்டாசியம் அப்புறம் B6 வைட்டமின் மூளையின் செயல்பாட்ட மேம்படுத்தி, நரம்பு மண்டலத்த ஊக்குவிக்குது.
  • கலோரிகள் குறைவாவும், நார்ச்சத்து அதிகமாவும் இருக்கறதால உடல் எடைய கட்டுப்படுத்த உதவுது.
  • சீத்தாப்பழம் வைட்டமின் ஏ மற்றும் ஈ ஆகியவற்றின் மூலம் தோல் மற்றும் முடியின் ஆரோக்கியத்த மேம்படுத்துது.

சீத்தாப்பழத்தின் பிற பயன்பாடுகள் (Non-Culinary Uses of Custard Apple)

  • சதை அப்புறம் விதைய அரைச்சு முகத்துக்கு முகமூடியா பயன்படுத்தலாம். இது முகப்பரு அப்புறம் சரும நோய்கள குறைக்க உதவும்.
  • சீத்தாப்பழத்தின் சதை மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து முடி வளர்ச்சி மற்றும் முடி ஈரப்பதத்த பராமரிக்க முடி மாஸ்கா பயன்படுத்தலாம்.
  • சீத்தாப்பழ விதைகள அரைச்சு நீரில கலந்து பூச்சிகள் உள்ள இடங்களில தெளிச்சா பூச்சிகள தடுக்க முடியும்

இறுதிச்சுருக்கம்

சீத்தாப்பழம் சுவையானது மட்டுமல்ல, பலவிதமான ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குது. எனவே, உங்கள ஆரோக்கியம் அப்புறம் நல்வாழ்வுக்கான பல பலன்கள பெற இந்த சுவையான பழத்த சாப்பிட்டு மகிழுங்க.

மேலும், பல உணவுப் பொருட்கள பத்தி தெரிஞ்சுக்க Uyir Organic Farmers Marketல எங்களோட பிற வலைப்பதிவுகளையும் படியுங்க. எங்களோட உணவுப் பொருட்கள எங்களோட கடைகள்ல வாங்கிக்கலாம். வீட்டுல இருந்தபடியே ஆர்டர் பன்ன எங்க வலைத்தளத்தையோ, appபையோ பயன்படுத்துங்க.