ரத்தசாலிஅரிசி (Rathasali Rice)

ரத்தசாலி அரிசி

வரலாற்றில் ஒரு பார்வை (History of Rathasali Rice)

அரிசி வகைகள்ல மிக பழமையான ஒன்னு ரத்தசாலி அரிசி. பல நூற்றாண்டுகளா ஆயுர்வேத மருத்துவர்கள் மருந்தாவும், நோயாளிகளுக்கு உணவாவும், துணை மருந்தாவும் கொடுத்துட்டு வர்ராங்க.

“சிவப்பு அரிசி” அல்லது “ரோசெல்லே ரைஸ்” அப்படீன்னு அழைக்கப்படுற ரத்தசாலி அரிசி, தெற்காசிய அப்புறம் தென்கிழக்கு ஆசிய கலாச்சாரங்களில ஆழமா வேரூன்றி ஒரு வளமான வரலாற்ற கொண்டிருக்கு.

ரத்தசாலி அரிசி இந்திய துணைக் கண்டத்தில, குறிப்பாக இப்போது இந்தியா, இலங்கை அப்புறம் வங்காளதேசத்த உள்ளடக்கிய பகுதிகளில தோன்றியதா நம்பப்படுது. இந்தப் பகுதிகளில பழங்குடி சமூகங்களால பல நூற்றாண்டுகளா பயிரிடப்பட்டுருக்கு.

ரத்தசாலி அரிசியின் பண்புநலன்கள் (Characteristics of Rathasali Rice)

ரத்தசாலி நெல் ரகம் 120 முதல் 125 நாட்கள் வயதுள்ள குட்டையான சன்ன சிவப்பு அரிசி. இது மூன்று பருவத்திற்க்கும் ஏற்ற ரகம். இயல்பாவே நெல் வயலில அதிக எலி இருக்கும். ரத்தசாலி பயிரிட்டுள்ள வயலில இதன் வாசனைக்காகவே இருமடங்கு எலித்தொல்லை இருக்கும். அதுமட்டும் இல்ல நெல் உதிருர தன்மை இதுக்கு அதிகமாவே இருக்கு. அதனால இந்த ரகத்திற்கு பராமரிப்பு அதிகமா தேவைப்படுது. இந்த நெல்ல கையால அறுவடை செய்றதுதான் நல்லது அப்படீன்னு சொல்ராங்க. இதுக்கு ரத்தசாலி அப்படீன்னு பெயர் வரக் காரணம் நெல் தோல் மற்றும் அரிசி நிறம் ரத்த நிறத்துல இருக்கறது அப்புறம் ரத்தம் சார்ந்த எல்லா பிரச்னைகளையும் இது அகற்றுது.

ரத்தசாலி அரிசி நன்மைகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் (Nutritional Benefits of Rathasali Rice)

இந்த பாரம்பரிய ரத்தசாலி அரிசில பல வகையான ஊட்டச்சத்து நன்மைகள் நிரம்பி இருக்கு.

  • ரத்தசாலி அரிசியில நல்ல அளவு நார்ச்சத்து இருக்கு. இது செரிமானத்துக்கு உதவுது அப்புறம் குடல் ஆரோக்கியத்த மேம்படுத்தவும் உதவுது.
  • இதுல ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்து இருக்கு. இது உடல்ல உள்ள தீங்கு விளைவிக்குற ஃப்ரீ ரேடிக்கல்கள நடுநிலையாக்க உதவுது. இதனால நாள்பட்ட நோய்களின் அபாயத்த குறைக்குது.
  • ​​ரத்தசாலி அரிசியில அத்தியாவசிய வைட்டமின்கள், வைட்டமின் பி, இரும்பு அப்புறம் மெக்னீசியம் போன்ற தாதுப்பொருட்கள வழங்குது. இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் ஆதரிக்குது.
  • ரத்தசாலி அரிசி அத்தியாவசிய வைட்டமின்கள், வைட்டமின் பி, இரும்பு அப்புறம் மெக்னீசியம் போன்ற தாதுப்பொருட்கள வழங்குது. இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் அதிகரிக்குது.
  • பிற அரிசி வகைகளோட ஒப்பிட்டு பார்க்கும் பொது, ​​ரத்தசாலி அரிசியில குறைந்த கிளைசெமிக் குறியீடு இருக்கு. இது சிறந்த இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டிற்கு உதவுது. சர்க்கரை நோய் வர்றதுக்கான அபாயத்தையும் குறைக்குது.
  • மேலும், இதுல இயற்கையாகவே பசையம் இல்லாததால, இது பசையம் ஒவ்வாமை இருக்கவங்களுக்கும் செலியாக் நோய் உள்ளவர்களுக்கு ஏற்றதா அமையுது.
  • இது வாதம், பித்தம் அப்புறம் கபம் நாடி நிலைகள சுத்தம் செஞ்சு இயல்பா இயங்க வைக்கும். உடல நல்லா ஆரோகியமா வெச்சுக்குது.
  • நரம்பு பலவீனத்த சரி செய்யுது. உடல் வலிமைக்கு ரத்தசாலி கஞ்சி உதவுது.
  • ரத்த அழுத்தம், சிறுநீரக கோளாறுகள் அப்புறம் சர்க்கரை நோயாளிகளுக்கு இது ஒரு ஆரோகியமான உணவா அமையுது.
  • தாய்பால் சுரப்பு குறைவா இருக்கவங்களுக்கு ரத்தசாலி அரிசி, பனைவெல்லம், ஏலக்காய், பசும்பால் கலந்து கஞ்சிய செஞ்சு குடுத்தா நல்ல பலன்தரும்.
  • அலர்ஜி, தோல் நோய்,கர்ப்பப்பை சார்ந்த பிரச்னைகள், வயிறு தொந்தரவு, கல்லீரல் தொந்தரவுகளுக்கு உணவாக கொடுக்கலாம்.

​​ரத்தசாலி அரிசி சமையல் பயன்பாடு (Culinary Uses of Rathasali Rice)

பல்வேறு உணவுகளுக்கு பக்க உணவா வெள்ளை அரிசிக்கு ஆரோக்கியமான மாற்றா ரத்தசாலி அரிசிய பயன்படுத்தலாம்.

சுவையான அரிசி பிலாஃப், சாலடுகள், பொரியல், கொழுக்கட்டை, அரிசி கேக்குகள், அரிசி சூப்கள் மற்றும் ஸ்டவ்ஸ், அரிசிய மாவா அரைச்சு, ரொட்டி, அப்பம் அப்புறம் பிற வேகவைத்த பொருட்களுக்கான பசையம் இல்லாத பேக்கிங் ரெசிபிகளில பயன்படுத்தலாம்.

நாங்க இங்க கொடுத்துருக்கறது ஒரு சில வகைகள்தான், ஆனால் உங்களுக்குப் பிடிச்ச அரிசி உணவுகள்ல ரத்தசாலி அரிசியப் பயன்படுத்தி எல்லா வகையான சமையலையும் செஞ்சு பாருங்க!

சமையல் அல்லாத பிற பயன்பாடுகள் (Non- Culinary uses of Rathasali Rice)

  • ரத்தசாலி அரிசி தானியங்கள் கலை அப்புறம் கைவினைப் பொருட்கள் செய்ய பயன்படுத்தலாம்.
  • ரத்தசாலி அரிசியோட உமிகள் சுற்றுச்சூழலுக்கு உகந்த பேக்கேஜிங் பொருட்கள் செய்ய தேவையான மூலப்பொருளா பயன்படுது.
  • அவை மக்கும் தன்மை கொண்டவை அதனால தட்டுகள், கொள்கலன்கள், மடக்கு காகிதம் போன்ற பேக்கேஜிங் பொருட்களா வடிவமைக்கவும் பயன்படுது.
  • ரத்தசாலி நெல் உமி, எடை குறைந்ததாவும், உறிஞ்சக்கூடிய தன்மை கொண்டதாவும் இருக்கறதால வெள்ளெலிகள், ஜெர்பில்கள் மற்றும் அப்புறம் பறவைகள் போன்ற சிறிய விலங்குகளுக்கு படுக்கைப் பொருளாக பயன்படுத்தலாம்.
  • தோட்டக்கலையில நெல் உமிகள தழைக்கூளம் இல்லைனா மண் திருத்தமா பயன்படுத்தலாம். அவை ஈரப்பதத்த தக்கவைக்கவும், களை வளர்ச்சிய அடக்கறதுக்கும் பயன்படுது. மண்ணின் காற்றோட்டம் அப்புறம் வடிகால மேம்படுத்தவும் உதவுது.
  • உயிரி எரிபொருளா நெல் உமிகள எரிக்கலாம். அவை வெப்பம் அப்புறம் மின்சாரத்த உருவாக்க கொதிகலன்களில பயன்படுத்தப்படலாம். அதனால் இது ஒரு நிலையான ஆற்றல் மூலத்த வழங்குது.
  • ரத்தசாலி நெற்பயிர்களுக்கு இயற்கையான வாசனைய உறிஞ்சும் தன்மை இருக்கு. அதனால காலணிகள், அலமாரிகள் அல்லது குளிர்சாதனப்பெட்டிகளில உள்ள நாற்றங்கள உறிஞ்சுரத்துக்கு அவற்றை பைகளில போட்டு பயன்படுத்தலாம்.
  • சில கலாச்சாரங்களில, ரத்தசாலி அரிசி உள்ளிட்ட அரிசி தானியங்கள் பாரம்பரிய சடங்குகள், விழாக்கள் அப்புறம் கலை நிகழ்ச்சிகளில பயன்படுத்தப்படுது. ஏன்னா கருவுறுதல், செழிப்பு ஆகியவற்ற குறிக்குது.

முடிவுரை

ஒட்டுமொத்தமா, ரத்தசாலி அரிசிய உங்கள் உணவில சேர்த்துக்கறது, சீரான அப்புறம் சத்தான உணவு முறைக்கு பங்காளிக்குது. சிறந்த ஆரோக்கிய விளைவுகள ஊக்குவிக்குது.

மேலும், பிற அரிசி வகைகள் மற்றும் உணவுகள பத்தி நீங்க தெரிஞ்சுக்கணும் அப்படீன்னா எங்களோட பிற வலைப்பதிவுகள படியுங்க. நல்ல உணவுப்பொருட்களையே சாப்பிட்டு ஆரோகியமா வாழனும் என்கிற நோக்கத்தோட உயிர் இயற்கை உழவர் சந்தைல கிடைக்குற தூய்மையான உணவு பொருட்களையே வாங்கி பயன்படுத்துங்க.

நாங்க Uyir Organic Farmers Marketல இயற்கையான மற்றும் தரமான உணவு பொருட்கள மட்டுமே விற்பனை செய்யுறோம். ஆன்லைன்ல எங்களோட வலைத்தளம் மூலமா அல்லது app மூலமாவும் நீங்க உணவு பொருட்கள ஆர்டர் செய்யலாம்.