தர்பூசணி (Water Melon / Tharpoosani)

தர்பூசணி

வரலாற்றில் ஒரு பார்வை (History of Watermelons)

தர்பூசணி, அறிவியல் ரீதியா Citrullus lanatus அப்படீன்னு அழைக்கப்படுது. தர்பூசணி ஆப்பிரிக்காவில, குறிப்பா இந்த கால போட்ஸ்வானா (Botswana) பகுதியில தோன்றியதா நம்பப்படுது.

காட்டு தர்பூசணிகள் முதன்முதலா எகிப்துல இருக்க நைல் பள்ளத்தாக்கில, சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்பே பயிரிடப்பட்டதா நம்பப்படுது. கிமு 4,000 ஆம் ஆண்டுலயே பண்டைய எகிப்தியர்களால தர்பூசணிகள் பயிரிடப்பட்டதா தொல்பொருள் சான்றுகள் தெரிவிக்குது.

எகிப்துல இருந்து, தர்பூசணி சாகுபடி ஆப்பிரிக்காவோட பிற பகுதிகளுக்கு, மத்திய கிழக்கு அப்புறம் மத்திய தரைக்கடல் போன்ற அண்டை பகுதிகளுக்கும் பரவுது. கிரேக்கர்கள் அப்புறம் ரோமானியர்கள் உட்பட பல்வேறு பண்டைய நாகரிகங்களில இது ஒரு பிரபலமான பயிரா ஆகிடுச்சு.

தர்பூசணி சாகுபடி கடைசியா ஆசியாவுக்கு வருது. இங்க இந்தியா, சீனா அப்புறம் பெர்சியா (இன்றைய ஈரான்) போன்ற நாடுகளில பரவலா வளர்க்கப்பட்டுச்சு.

சீனாவில, தர்பூசணி சாகுபடி குறைந்தது 10 ஆம் நூற்றாண்டிற்கு முன்னாடி இருந்து இருக்கு. மேலும் சீன விவசாயிகள் இனப்பெருக்கம் மூலமா ஏராளமான தர்பூசணிகள உருவாக்கி இருகாங்க.

தர்பூசணியின் பண்புகள் (Characteristics of Watermelon)

  • தர்பூசணிகள் பொதுவா அடர் பச்சை நிற கோடுகள் அப்புறம் வெளிர் பச்சை நிற தோல கொண்டிருக்கும். மேலும், திடமான பச்சை அல்லது மஞ்சள் தோலைக் கொண்ட வகைகளும் இருக்கு.
  • தர்பூசணி பழத்தோட சதை நல்ல சிவப்பு நிறத்தில இருந்து இளஞ்சிவப்பு நிறம் வரைக்கும் மாறுபடும். சில வகைகள் மஞ்சள் அப்புறம் ஆரஞ்சு நிறத்தில கூட இருக்கும்.
  • தர்பூசணிகள் பல்வேறு வடிவங்கள் மற்றும் அளவுகளில வரும். அவை வட்டம் முதல் நீள்சதுர வடிவம் வரை இருக்கும். மேலும் அதனோட வகைய பொறுத்து எடையும் மாறுபடும்.
  • தர்பூசணி புத்துணர்ச்சியூட்டுற மிருதுவான இனிமையான சுவை கொண்டது. சதை பகுதில இருக்க நீர் தாகத்த தணிப்பதா இருக்கு.
  • பாரம்பரிய தர்பூசணியோட விதைகள் பொதுவா கருப்பு இல்லைனா அடர் பழுப்பு நிறத்தில இருக்கும். இருந்தாலும் தர்காலத்துல விதை இல்லாத வகைகள் பிரபலமா இருக்கு.

தர்பூசணியின் நன்மைகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் (Benefits of Watermelon and its nutritional value)

  • தர்பூசணியில நீர்ச்சத்து அதிகமா இருக்கு. அதனோட எடையில 90% க்கும் அதிகமான தண்ணீரா தான் இருக்கும். குறிப்பா வெப்பமான காலநிலையில அல்லது உடற் பயிற்சி செஞ்சதுக்கு அப்புறம், நீரேற்றமா இருக்க இத சாப்பிடலாம்.
  • தர்பூசணியில வைட்டமின் சி இருக்கு. இது ஒரு ஆக்ஸிஜனேற்றியாவும் செயல்படுது. நோயெதிர்ப்பு மண்டலத்த ஆதரிக்க உதவுது. ஆரோக்கியமான சருமத்த மேம்படுத்துது அப்புறம் காயத்த குணப்படுத்த உதவுது.
  • இதுல பீட்டா கரோட்டின் இருக்கு. இது பார்வை, நோயெதிர்ப்பு செயல்பாடு அப்புறம் தோல் ஆரோக்கியம் எல்லாத்துக்கும் முக்கியமானது.
  • தர்பூசணியில பொட்டாசியம் நிறைய இருக்கு. இது இரத்த அழுத்தம், திரவ சமநிலை அப்புறம் நம்ம உடலோட தசை செயல்பாடு எல்லாத்தையும் சீராக்க உதவுற எலக்ட்ரோலைடா செயல்படுது.
  • மேலும், இதுல மெக்னீசியம் இருக்கு. இது உடலில 300 க்கும் மேற்பட்ட உயிர்வேதியியல் எதிர்வினைகளில ஈடுபடுது. அதுல ஆற்றல் உற்பத்தி, தசை செயல்பாடு அப்புறம் எலும்பு ஆரோக்கியம் எல்லாம் அடங்கும்.
  • தர்பூசணில லைகோபீனின் அப்படீங்குற சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றி இருக்கு. இது பழத்துக்கு சிவப்பு நிறத்த அளிக்குது. மேலும், இதய நோய், சில புற்றுநோய்கள் அப்புறம் வயதாகுறதுனால ஏற்படுற மாகுலர் சிதைவு அப்படீன்னு பல்வேறு நோய்கள தடுக்கற திறன் கொண்டிருக்கு.
  • தர்பூசணியில சிட்ருலின் அப்படீங்குற அமினோ அமிலம் இருக்கு. இது உடலில் அர்ஜினைன் அப்படீங்குற வேதிப்பொருளா மாற்றப்படுது. இரத்த நாளங்களின் விரிவாக்கத்தில அர்ஜினைன் பங்கு வகிக்குது. இது இரத்த ஓட்டம் அப்புறம் இருதய ஆரோக்கியத்த மேம்படுத்த உதவுது.
  • இது சிறிய அளவிலான உணவு நார்ச்சத்தும் வழங்குது. அது செரிமானத்துக்கும் உதவுது.
  • தர்பூசணியில கலோரிகள் மிகக் குறைவா இருக்கு. ஒரு கப் துண்டாக்கப்பட்ட  தர்பூசணியில சுமார் 46 கலோரிகள் மட்டுமே இருக்கு.

ஒட்டுமொத்தமா, தர்பூசணி ஒரு ஊட்டச்சத்து நிறைந்த பழம்.

Watermelon +தர்பூசணி

சமையல் பயன்பாடுகள் (Culinary Uses of Watermelons)

  • பழத்த துண்டாக்கி சிற்றுண்டியா அப்படியே சாப்பிடலாம்.
  • பிற பழங்களோட சேர்த்து சாலடா சாப்பிடலாம்.
  • தர்பூசணி பழச்சாறு செஞ்சு குடிக்கலாம்.
  • தர்பூசணிய அரைச்சு ப்யூரி செஞ்சு உறைய வெச்சு வீட்டில சர்பெட் இல்லைனா ஐஸ்கிரீம் செஞ்சு சாப்பிடலாம்.
  • தர்பூசணிய ஃப்ரூட் டார்ட்ஸ், பாப்சிகல்ஸ், ஃப்ரூட் சாலடுகள் போன்ற இனிப்புகளில சேர்த்து பயன்படுத்தலாம்.

சமையல் அல்லாத பிற பயன்பாடுகள் (Non-culinary uses of Watermelons)

  • தர்பூசணி தோல் பராமரிப்புல பயன்படுத்தப்படுது. இதுல இருக்க அதிக நீர்ச்சத்து சருமத்த நீரேற்றத்தோடவும், ஈரப்பதமாவும் வெச்சுக்குது.
  • மேலும், இதனோட சாறு முடிக்கு இயற்கையான கண்டிஷனரா பயன்படுத்தலாம்.
  • இது முடிக்கு ஊட்டமளிக்க உதவுது, இது மென்மையாவும், பளபளப்பாவும் வெச்சுக்குது. சந்தையில கிடைக்குற சில முடி பராமரிப்புப் பொருட்களிலையும் பயன்படுத்தப்படுது.
  • பாரம்பரிய மருத்துவத்தில பயன்படுத்தப்படுது. இது சிறுநீர் உற்பத்திய ஊக்குவிச்சு, உடலில இருந்து நச்சுக்கள வெளியேற்ற உதவுது.
  • தர்பூசணி தோல்கள் கால்நடைகளுக்கு தீவனமா கொடுக்கப்படுது.
  • துணிகள் மற்றும் ஜவுளிகளுக்கு வண்ணம் பூச இயற்கை சாயங்கள பிரித்தெடுக்க தர்பூசணி தோலை வேகவைக்கலாம். இது பச்சை அப்புறம் மஞ்சள் நிறங்கள உருவாக்குது.

முடிவுரை

இந்த வலைப்பதிவுல தர்பூசணியோட எக்கச்சக்கமான நன்மைகள தெரிஞ்சுருப்பீங்க. மேலும் பல்வேறு உணவுப் பொருட்கள பத்தி எல்லா விஷயங்களையும் தெரிஞ்சுக்கணும்னா எங்களோட பிற வலைப்பதிவுகள படியுங்க.

எந்த விதமான வேதிப்பொருட்களையும் பயன்படுத்தாம விளைவிக்கப்பட்ட சுவையான ஆரோகியமான உணவு பொருட்கள் வேணுமா உடனே எங்களோட உயிர் இயற்கை உழவர் சந்தைக்கு (Uyir Organic Farmers Market) வாங்க உங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்கள வாங்கிட்டு போங்க. மேலும் எங்களோட வலைத்தளம் மூலமாவோ அல்லது app மூலமாவோ கூட நீங்க ஆர்டர் செய்யலாம்.