அரப்பு (Arappu)

அரபின் நன்மைகள்

வரலாற்றில் ஒரு பார்வை (History of Arappu)

அரப்பு, தமிழ்நாட்டின் பாரம்பரிய தலைமுடி சுத்திகரிப்பு பொருள். இது உசில மரத்தோட (அல்பிசியா அமரா) இலைகள உலர்த்தி, அரைத்து எடுக்குற பசுமையான தூள். இத பொதுவா கிராமப்புறங்களில, குழந்தைகளும் பெரியவங்களும் தலைமுடி சுத்தம் செய்ய பயன்படுத்துறாங்க. அரப்பின் வரலாறு பல நூற்றாண்டுகளுக்கு முன்னால தொடங்கியதா சொல்லலாம், தமிழர்களின் பாரம்பரியத்த இது பிரதிபலிக்குது. அரபின் நன்மைகள்பத்தி இந்த வலைப்பதிவுல பாக்கலாம் வாங்க.

அரப்பு தூள், முகலாயர்கள் காலத்துல பரவலா பயன்படுத்தி இருகாங்க. இந்த காலத்துலையும் அரப்பு தூள் பலராலும் விரும்பி பயன்படுத்தப்படுது.

அரப்போட சுகாதார மற்றும் மருத்துவ நன்மைகள் ஆயுர்வேதத்தில பெரிதும் பாராட்டப்படுது. இது பல்வேறு மருத்துவ முறைகளில பயன்படுத்தப்படுது.

அரப்பின் தன்மை (Characteristics of Arappu)

 • அரப்பு தூள் எந்தவித இரசாயனமோ, செயற்கை வண்ணமோ, மணமோ இல்லாம இயற்கையாகவே கிடைக்குது.
 • அரப்பு தூள் பச்சை நிறத்துல இருக்கும். இத தண்ணீர்ல கலந்து பசை போல மாற்றி பயன்படுத்தலாம்.
 • அரப்புக்கு சுவை இல்லாம சுத்தமான நல்ல மணம் மட்டும் வரும். இதை பயன்படுத்தினா தலைமுடிக்கு கூட நல்ல மணம் வரும்.

அரப்பின் நன்மைகள் (Benefits of Arappu)

 • அரப்பு, இயற்கையான நறுமணம் கொண்டது.
 • இது தலைமுடி சுத்தமாக வைக்க உதவுது. இரசாயனங்கள் இல்லாமா இயற்கையா இருக்க உதவுது.
 • அரப்பு, தலைமுடி வளர்ச்சிய மேம்படுத்துது அப்புறம் தலைமுடி கொட்டல குறைக்குது.
 • இது தலைமுடி வளம், மென்மை மற்றும் ஆரோக்கியத்த அதிகரிக்குது.

அரப்பின் சுகாதார நன்மைகள் (Health Benefits of Arappu)

 • அரப்பில இருக்குற நார்ச்சத்து செரிமானத்த மேம்படுத்துது.
 • அரப்பு தூள், தலையில இருக்குற மாசு அப்புறம் எண்ணைய நீக்க, தலைய சுத்தமா வெச்சுக்க உதவுது.
 • அரப்பு, தலைமுடி வளர்ச்சிய ஊக்குவிக்குது அப்புறம் தலைமுடி அழக மேம்படுத்துது. இது தலைமுடி அடர்த்தியோட வளமானதாகவும் இருக்க உதவுது.
 • அரப்பு, தலைக்கு இயற்கையான நுரைய கொடுக்கும். தோலின் ஈரத்தன்மைய சீராக்குது. இதனால தோல் சீராவும், பொலிவாவும் இருக்கும்.
 • அரப்பு, தலைமுடி சொரசொரப்பு குறைஞ்சு மென்மையா, அடர்த்தியோட இருக்க உதவுது. இதனால தலைமுடி மிருதுவாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

ஆரோக்கியம் மற்றும் அழகு சிகிச்சை (Benefits of Arappu in Beauty)

 • அரப்புடன் மஞ்சள கலந்து இயற்கையான முகமூடியா பயன்படுத்தலாம். இது முகத்தில பொலிவ அதிகரிக்க உதவுது. இதனால முகம் பிரகாசமாகவும் அழகாவும் இருக்கும்.
 • அரப்பால தலைமுடி சுத்தமாவதாலும், தலைமுடி வியர்வை பிரச்சினைகள் குறைவதாலும், வியர்வை துர்நாற்றம் குறையவும் உதவுது.
 • அரப்பு தூள முகத்தில தடவினா முகத்தின் சருமம் மென்மையாகவும் பிரகாசமாகவும் இருக்கும்.
 • அரப்பு, தலைக்கு நுரை கொடுக்கும். இதன் இயற்கையான இயல்பு தலைமுடி அப்புறம் தோலுக்கு மிகவும் நல்லது.

இறுதிச்சுருக்கம்

இந்தமாதிரி அரிப்பின் நன்மைகள பல பல. அரப்பு, நம்மளுக்கு பயன்படுற, பரம்பரியமான ஒரு இயற்கை சுத்திகரிப்பு பொருள். அத தொடர்ந்து பயன்படுத்தி, அதன் முழு நன்மைகளையும் அனுபவிக்கலாம். இயற்கையான அரப்பு தூள Uyir Organic Farmers Marketலிருந்தோ, அவங்களோட இணையதளம், செயலி மூலமோ வீட்டிலிருந்தபடியே ஆர்டர் பண்ணி வாங்கலாம். உங்க இயற்கை மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அரப்பு ஒரு சிறந்த தேர்வா இருக்கும்.